2025ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்!
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுரா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு O/L பரீட்சை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெற்றதுடன், நாடு முழுவதும் 451,463 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இதனிடையே, 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர (A/L) பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அதை ஒத்திவைக்கும் அவசியம் தற்போது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்வுகள் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, 2026 உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறவுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
