சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடியாகக் குறைப்பு!
லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அறிவிப்பின்படி, இன்று (10) முதல் புதிய விலைத் திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன.
பெரிய வெங்காயம், வெள்ளைச் சீனி, பருப்பு, தட்டைப்பயறு, கடலை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கோதுமை மா, சிவப்பு பச்சரிசி, சிவப்பு நாட்டரிசி, சம்பா அரிசி, வெள்ளை நாட்டரிசி, பொன்னி சம்பா உள்ளிட்ட 18 வகையான அத்தியாவசியப் பொருட்கள் இந்த விலைக்குறைப்புப் பட்டியலில் அடங்குகின்றன.
மத்திய கிழக்கில் நிலவும் யுத்தச் சூழலால் உருவான உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி
