நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!
இலங்கையில் இன்று (11) தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 8,000 ரூபாயால் குறைந்து, 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 340,400 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
கிராம் அடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 42,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் கொள்வனவு செய்யத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு இந்த விலை குறைவு ஓரளவு நிவாரணமாக அமைந்துள்ளதாக நகை வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், இன்று (11) வெளியிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை உயர்வடைந்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 337.82 ரூபாயாக பதிவாகியுள்ளது. முந்தைய நாளில் அது 335.39 ரூபாயாக காணப்பட்டது.
வெளிநாட்டு நாணய சந்தை நிலவரம் மற்றும் பொருளாதார காரணிகளின் தாக்கத்தால் நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
