எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வு!


உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்வை பதிவு செய்து வருகின்றன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களும், ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எரிசக்தி விநியோக தடைகளும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.

தற்போதைய சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் சுமார் 100.3 அமெரிக்க டொலராகவும், Brent ரக எண்ணெய் சுமார் 111.7 அமெரிக்க டொலராகவும் நிலவுகிறது. அதேவேளை இயற்கை எரிவாயு விலை 2.559 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

இந்த சூழ்நிலை தொடர்ந்தால், வரும் வாரங்களில் எரிசக்தி விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கிடையில், உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டில் எரிசக்தி விலைகள் 24 சதவீதம் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எரிசக்தி மற்றும் உரங்களின் விலை உயர்வால் 2026 ஆம் ஆண்டில் மொத்த பொருட்களின் விலைகள் சுமார் 16 சதவீதம் வரை அதிகரிக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தடைகள் உலக எண்ணெய் வர்த்தகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இருப்பினும் நிலைமை 2026 இறுதிக்குள் சீராகும் வாய்ப்பு உள்ளதாகவும் உலக வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.