பிரிமா கோதுமை மாவின் விலை இன்று முதல் அதிகரிப்பு!
கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிக்க ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நிறுவனத்தின் கோதுமை மாவின் ஒரு கிலோகிராம் விலை 5 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதையே இந்த விலை உயர்விற்கான முக்கிய காரணமாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், இதுவரை 220 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் புதிய விலை 225 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
