பஸ்களில் பயண சீட்டு வழங்கப்படுவதில்லை என பயணிகள் புகார்!
மத்திய மலைநாட்டு நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா பகுதியில் இயங்கும் சில அரச பேருந்துகளில் பயணச்சீட்டுகள் வழங்கப்படவில்லை என பயணிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
நல்லதண்ணி முதல் கொழும்பு நோக்கி அதிகாலை இயக்கப்படும், அவிஸ்சாவளை அரச பேருந்து நிலையத்துக்கு உட்பட்ட பேருந்துகளிலும், ஹட்டன் முதல் சாமிமலை நோக்கி மாலை நேரத்தில் செல்லும் பேருந்துகளிலும் இவ்வாறான முறைகேடு இடம்பெறுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட ஹட்டன் மற்றும் அவிஸ்சாவளை அரச பேருந்து நிலைய அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்தி, பயணிகளுக்கு முறையாக பயணச்சீட்டுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான முறைகேடுகளைத் தடுக்க அந்தப் பகுதிகளில் அடிக்கடி பயணச்சீட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
