சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!


நாட்டின் பொதுமக்களின் முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் நோக்கில், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வுபெற்ற) அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முப்படைகள், இலங்கை பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் இணைந்து இந்த விசேட பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுக்கின்றன. இதன் மூலம் நாடு முழுவதும் நடைபெறும் விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மத வழிபாட்டு நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளன.

இதற்காக, கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டு அறை ஒன்று நிறுவப்பட்டுள்ளதுடன், முப்படை அதிகாரிகள் இணைந்த ஒருங்கிணைந்த குழுவின் கீழ் இது செயற்படுகிறது.

பொதுமக்கள் தேவையெனில், இந்த செயற்பாட்டு மையத்தை பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம்:

தொலைபேசி எண்கள்: 011-2013051 / 011-2027148 / 011-2027149 / 011-2430912
மின்னஞ்சல் முகவரி: igp.opsroom@police.gov.lk