முழு உலகையுமே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்: நாடு முழுவதும் இன்று விசேட நினைவேந்தல்!


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று நாடு தழுவிய ரீதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெறுகின்றன.

காலை 8.45 மணிக்கு குண்டு வெடித்த நேரத்தை நினைவுகூரும் வகையில் தேவாலயங்களில் மணி ஒலிக்கப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தலும், விசேட பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையில் பிரதான நிகழ்வு நடைபெறுகிறது. மேலும், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் விசேட திருப்பலி மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

நீதி மற்றும் உண்மையை கோரி, மாலை நேரத்தில் மாபெரும் பிரார்த்தனை பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தலை முன்னிட்டு, தேவாலயங்களைச் சூழ பலத்த பாதுகாப்பு மற்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 269 பேர் உயிரிழந்ததுடன், 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.