பல மாகாணங்களில் இன்று வெப்பமான வானிலை - பிற்பகலில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை!


நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிக வெப்பமான வானிலை நிலவும் நிலையில், பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் 100 மிமீ வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களைத் தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் அதிக வெப்பம் காணப்படும். வடக்கு, வடமத்திய, கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் மனித உடலுக்கு பாதிப்பு அளிக்கும் அளவுக்கு வெப்பம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் பகுதிகளில் மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும். சில நேரங்களில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.