பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் - வெளியான விசேட அறிவிப்பு!
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2025 உயர்தரப் பெறுபேறுகளின்படி, மொத்தம் 176,527 மாணவர்கள், அதாவது 62.64% பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். கடந்த மார்ச் 31 ஆம் திகதி இரவு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்ட நிலையில், இம்முறை பரீட்சைக்கு 281,810 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இதற்கிடையில், 111 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், 2025 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 30,000-க்கும் மேற்பட்டோர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
.jpg)