மெகசின் சிறைச்சாலை கைதி மரணம் : சிறை அதிகாரி உட்பட இருவர் கைது!
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பொரளை பொலிஸார் நேற்று (27) ஒரு சிறைக் காவலாளியையும் ஒரு காவலரையும் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, சிறைக்குள் இரண்டு கைதிகளுக்கும் ஒரு காவலருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த மோதலில் மூவர் காயமடைந்ததுடன், பின்னர் அனைவரும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த கைதிகளில் ஒருவரான, கொழும்பு 14, நவகம்புர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியல் காவலில் வைக்கப்பட்டிருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கொழும்புப் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Tags:
இலங்கை செய்தி
