மீண்டும் அதிகரிக்கப்படுமா மின்கட்டணம் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிசீலனை!


நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி கோரி தேசிய கட்டமைப்பு நிர்வாக தனியார் நிறுவனம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தற்போது பரிசீலனை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்ததாவது, முன்வைக்கப்பட்டுள்ள யோசனை குறித்து ஆய்வு செய்து, எதிர்வரும் சில நாட்களுக்குள் ஆணைக்குழுவின் இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்படும் எனக் கூறினார்.

2026ஆம் ஆண்டுக்கான ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வரையிலான காலப்பகுதிக்காக சுமார் 15 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகளை ஈடுசெய்வதற்காக இந்த உயர்வு அவசியமாகியுள்ளது. குறிப்பாக, சுமார் 16 பில்லியன் ரூபாய் அளவிலான மேலதிகச் செலவை சமாளிக்கவே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.