கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (10) பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இலங்கை வானிலை ஆய்வு திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் பலத்த மின்னல் தாக்கங்களுடன் தற்காலிகமாக பலமான காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி, இரவு 11.00 மணி வரை 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மேலும் 7 மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி

