ஹோமாகமவில் தனியார் பல்கலை மாணவனின் மரணம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!
ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் இடையேயான மோதலில், 19 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பல்கலைக்கழகத்தில் கடந்த (09)ஆம் திகதி சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா நடவடிக்கைகள் மாலை 6 மணியளவில் நிறைவடைந்த பின்னர், மாணவர்கள் சிலர் தனியார் விருந்து ஒன்றை இரவில் ஏற்பாடு செய்துள்ளனர்.
அந்த விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவி கழிவறைக்கு சென்ற நிலையில், அவரைத் தொடர்ந்து ஒரு மாணவன் சென்றுள்ளார். இதைக் கவனித்த அந்த மாணவியின் நண்பரான பின்னர் உயிரிழந்த மாணவர், அந்த பின்தொடர்ந்த மாணவரைத் தாக்கியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, தாக்குதலுக்குள்ளான மாணவரின் நண்பர்கள் குழு ஒன்று, குறித்த மாணவரை கடுமையாகத் தாக்கி அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் கடுமையாக காயமடைந்த மாணவர் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர் நிக்கதலுபொத்த, வெல்லவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக இதுவரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கை பொலிஸ் துறை சார்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
.jpg)