புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை!
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (10) காலை மேற்கொண்ட திடீர் ஆய்வின்போது அவர் இதனைத் தெரிவித்தார். பேருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் திட்டமிட்ட குழுக்களின் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அமைச்சர் வெளியிட்டார்.
பெண்கள் கழிப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த நீர்குழாய்கள் முதல் நாளிலேயே அகற்றப்பட்டிருந்ததாகவும், பின்னர் அவை மீண்டும் பொருத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், நேற்று (09) இரவு மீண்டும் அவை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலைமைக்கு தீர்வு காணும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும், அதன் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Tags:
இலங்கை செய்தி
