இலங்கையில் இன்றைய தங்க விலை தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கையில் இன்று (16) தங்க விலையில் எவ்வித மாற்றமும் இல்லையென அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போதைய நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று ரூ.402,000 ஆகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று ரூ.369,900 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.50,250 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.46,238 ஆகவும் காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உயர்வைக் கண்டிருந்த தங்க விலை, இன்று எந்த மாற்றமும் இன்றி நிலையான நிலையில் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
