நீர் விநியோகம் துண்டிக்கப்படுவது தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, நாளைய தினம் வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இந்தத் தீர்மானமானது மக்களின் தேவைகள் மற்றும் வசதிகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக, அந்தச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
எனினும், எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர் நீர் வழங்கல் தொடர்பான நிலைமைகள் மீளாய்வு செய்யப்பட்டு, தேவையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
