மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் குறித்து முறையிட துரித தொலைபேசி இலக்கம்!
பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வது அல்லது மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் குறித்து, பொதுமக்கள் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் துரித இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு அந்த அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுக்கும் நோக்கில், வார இறுதி நாட்களிலும் முற்றுகை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் சமந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, வார இறுதி நாட்களிலும் சந்தை விலைகளை கண்காணிக்கும் வகையில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த கண்காணிப்பு பணிகளுக்காக 350 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை தொடர்ந்து பரிசோதிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 6,000 முற்றுகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
