புத்தாண்டு காலத்தில் பதிவான பட்டாசு விபத்துக்கள் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!


கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு புத்தாண்டு காலத்தில் பட்டாசு விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக, புத்தாண்டு மற்றும் பிற பண்டிகைக் காலங்களில் வீதி விபத்துகள் மற்றும் பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகள் அதிகரிப்பது வழக்கமாகும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு சாதாரண வாரத்தில் சுமார் 25,000 பேர் பல்வேறு விபத்துகள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இவ்வாண்டு புத்தாண்டை முன்னிட்டு முதல் வாரத்தில் மட்டும் சுமார் 30,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சாதாரண வாரங்களுடன் ஒப்பிடுகையில் 14 சதவீத அதிகரிப்பாகும்.

எனினும், மொத்த விபத்துகளில் அதிகரிப்பு காணப்பட்டாலும், பட்டாசு விபத்துகளின் எண்ணிக்கை மட்டும் கடந்த காலங்களை விட படிப்படியாகக் குறைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.