எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த எல்பி எரிவாயு விநியோகம் இன்று (16.04.2026) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட முனையங்கள் வழியாக, கையிருப்பில் உள்ள சுமார் 5000 மெட்ரிக் தொன் எரிவாயு இன்று சந்தைக்கு வெளியிடப்படும் என லாப்ஸ் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், லிட்ரோ கேஸ் நிறுவனமும் இன்று முதல் தங்களது விநியோக நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என உறுதிப்படுத்தியுள்ளது.
நுகர்வோருக்கு தொடர்ந்து சீரான விநியோகம் வழங்கப்படும் என்றும், மே மாதம் வரை போதுமான கையிருப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், எல்பி எரிவாயு விநியோகம் இனி தடையின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி
