அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சை - வெளியான அறிவிப்பு!
இலங்கை அதிபர் சேவையின் தரம் III-க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாளை (26) நடைபெறவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை, மறு அறிவித்தல் வரும் வரை பிற்போடப்பட்டுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ளார்.
தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பரீட்சை திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
