லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
நாட்டில் மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்வதற்காக தேவையான கையிருப்புகள் மாலைத்தீவின் மிதக்கும் சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால், மே மாதத்தில் எரிவாயு விநியோகத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 20,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று தென் அமெரிக்காவிலிருந்து ஏற்கனவே புறப்பட்டுள்ளதுடன், அது மே மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், எதிர்வரும் வாரங்களில் வரவிருக்கும் எரிவாயு கப்பல்களைப் பொருத்தவரை தேவையான திட்டமிடல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, ஏப்ரல் 25ஆம் திகதி நாட்டை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்த 20,000 மெட்ரிக் டொன் எரிவாயு கப்பல் தொடர்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
மேலும், ஏப்ரல் மாதத்திற்காக ஆர்டர் செய்யப்பட்ட மொத்தம் 38,000 மெட்ரிக் டொன் எரிவாயுவில், 7,000 மெட்ரிக் டொன் கொண்ட முதல் தொகுதி மார்ச் மாத இறுதியில் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
