பல்கலைக்கழக வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
புதிய கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு நாளை (27) நள்ளிரவு வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த தகவலை ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.
2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 176,527 மாணவர்கள் (62.64%) பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 281,810 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில், 111 பேரின் பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களம் மூலம் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், 30,000-க்கும் அதிகமானோர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர். பாடசாலை மட்டத்தில் 7,477 மாணவர்கள் (3.38%) அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்றுள்ளனர். தனியார் பரீட்சார்த்திகளில் 823 பேரும் அனைத்து பாடங்களிலும் ‘A’ பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழக அனுமதி தொடர்பான மேலதிக தகவல்களை மாணவர்கள் நாளை நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
