தங்க விலை மீண்டும் அதிகரிப்பு!
உள்நாட்டு தங்கச் சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய (15) முற்பகல் கொழும்பு செட்டியார்த் தெருவில் பதிவான தங்க விலை நிலவரப்படி,
22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 369,900 ரூபாவாக உயர்ந்துள்ளது. கடந்த 11ஆம் திகதி இதன் விலை 366,200 ரூபாவாக இருந்தது.
அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை கடந்த சனிக்கிழமை 398,000 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்று அது 402,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வு தொடர்பான தகவல்கள் கொழும்பு செட்டியார்த் தெரு தங்கச் சந்தை வட்டாரங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
Tags:
இலங்கை செய்தி
