சர்வதேச சந்தையில் சடுதியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள்!


சர்வதேச சந்தையில் இன்று (25) தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறைந்துள்ளதால், அது மக்களுக்கு சற்றே நிம்மதியை அளித்துள்ளது.

முன்னதாக, மத்திய கிழக்கு போர் ஆரம்பமான காலப்பகுதியில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலரை கடந்திருந்தது.

ஆனால் தற்போது, ஒரு அவுண்ஸ் தங்கம் சுமார் 4,708 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகிறது. அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளி 75.69 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இன்று (25) இலங்கையிலும் தங்க விலையில் குறைவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.