அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள பௌத்த பிக்குகள் குழு!
அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக பௌத்த பிக்குகள் குழுவினர் இன்று (17) காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
நேற்று (16) துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து வந்த இந்த குழுவினர், ஏப்ரல் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை அனுராதபுரத்திலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கம் வரை நடைபெறவுள்ள சமாதான பாதயாத்திரையில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த பாதயாத்திரை அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகிறது.
அதி வணக்கத்திற்குரிய பஞ்ஞாக்கர தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், அனுராதபுர ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெறப்பட்ட போதி மரக்கன்றை எடுத்துச் சென்று இந்த பாதயாத்திரையை முன்னெடுக்கவுள்ளனர்.
மேலும், ஜனாதிபதி செயலகம், ‘Clean Sri Lanka’ திட்டம், புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, முப்படையினர், பொலிஸார் மற்றும் தேசிய வடிவமைப்பு மத்திய நிலையம் உள்ளிட்ட பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த சமாதான நடைப்பயணத்திற்கு ஆதரவு வழங்குகின்றன.
இந்த பாதயாத்திரையின் மூலம் இலங்கையின் பௌத்த மரபுரிமைகள், பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினைத்திறன்கள் பொதுமக்களிடம் பரப்பப்படுவதே முக்கிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
