வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அவர்கள் நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் வழங்கினார்.
முன்னதாக நிதி மற்றும் பொருளாதார அலுவல்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராகப் பணியாற்றிய ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, இலங்கை திட்டமிடல் சேவையின் (SLPS) சிரேஷ்ட அதிகாரியாவார்.
தேசிய திட்டமிடல், அரச நிதி முகாமைத்துவம், பேரண்டப் பொருளாதார முன்கணிப்பு, அபிவிருத்தி நிதியளிப்பு, நிதி பகுப்பாய்வு, வரிக் கொள்கை மற்றும் உயர்கல்வி திட்டமிடல் உள்ளிட்ட துறைகளில் நீண்டகால அனுபவம் பெற்றவர் என தெரிவிக்கப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி
