இன்று நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை அமுல்!


இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகத்திற்கான QR முறைமை மீண்டும் அமல்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, முன்னதாக இருந்த எரிபொருள் ஒதுக்கீட்டு முறை மீண்டும் நடைமுறைக்கு வரும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகம் QR முறையின்றி வழமையான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

அந்த காலப்பகுதியில், வாகன இலக்கத் தகட்டின் ஒற்றை–இரட்டை இலக்க முறை பின்பற்றப்பட்டதுடன், டீசல் வாகனங்களுக்கு QR முறைமை மாற்றமின்றி தொடரப்பட்டது.

இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் அனைத்து வாகனங்களுக்கும் மீண்டும் QR முறைமையை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.