சித்திரை புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்!


சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, ஏப்ரல் 10 முதல் 18 வரை உள்ள எட்டு நாட்களில் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவை மீறிய வருமானம் பதிவாகியுள்ளது என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் மொத்தம் 1,170,830 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், புத்தாண்டு காலத்தின் தொடக்க நாளான ஏப்ரல் 10 அன்று அதிகபட்ச வாகனப் போக்குவரத்து பதிவாகியுள்ளது. அந்த நாளில் மட்டும் 161,847 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ததுடன், 59,815,450 ரூபா என்ற ஒருநாள் அதிகபட்ச வருமானமும் ஈட்டப்பட்டுள்ளது.