புதிய தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு!


இலங்கைக்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை சமர்ப்பித்தனர்.

நியமிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:

  1. பப்புவா நியூ கினியா நாட்டின் உயர்ஸ்தானிகராக வின்சென்ட் சுமேல் (புதுடில்லியை தளமாகக் கொண்டவர்)
  2. சோமாலிய பெடரல் குடியரசின் தூதுவராக அப்துல்லாஹி முகமது ஒடோவா (புதுடில்லியை தளமாகக் கொண்டவர்)
  3. லக்சம்பர்க் நாட்டின் தூதுவராக கிறிஸ்டியன் பீவர் (புதுடில்லியை தளமாகக் கொண்டவர்)
  4. வத்திக்கானின் அப்போஸ்தலிக்க தூதுவராக மொன்சிஞ்ஞோர் ஆண்ட்ரே ஜோஸ்வோவிக்
  5. பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகராக மேஜர் ஜெனரல் (ஓய்வு) நய்யார் நசீர்
  6. குவைத் நாட்டின் தூதுவராக சலே முபாரக் அல்-சரவி

இவர்கள் அனைவரும் தங்களது நற்சான்றிதழ்களை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தனர்.

இதன் பின்னர், ஜனாதிபதி அவர்களுடன் நட்பூட்டும் உரையாடலில் ஈடுபட்டார். இந்த சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.