வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமனம்!


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அநுர கருணாதிலக்க வலுசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேலும், வலுசக்தி அமைச்சுப் பொறுப்புடன் சேர்த்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராகவும் அவர் தொடர்ந்தும் கடமையாற்றவுள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.