பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு!


இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சிறிதளவு உயர்ந்துள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைகளில் குறுகிய அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். குறிப்பாக, சரக்குக் கட்டணங்கள் உயர்ந்திருப்பதே இந்த விலை உயர்விற்கான முக்கிய காரணமாகும் எனவும் விளக்கினார்.

மேலும், பொருட்கள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் கடை உரிமையாளர்கள் அல்லது மொத்த வியாபாரிகள் தேவையற்ற வகையில் பொருட்களை பதுக்கி வைப்பது அவசியமற்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன என்றும், பொதுமக்கள் தேவையற்ற பதட்டம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.