எரிபொருள் QR குறியீடு சிக்கல்களைத் தீர்க்க புதிய நடவடிக்கை!


எரிபொருளுக்கான QR குறியீடுகளைப் பெற முடியாமல் இருப்பவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில், ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் ஒன்பது WhatsApp இலக்கங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

மேலும், முன்பு பிழையாக இருந்த சுமார் 600,000 QR குறியீடுகள் திருத்தப்பட்டுள்ளதாக CPC-யின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

அத்துடன், QR குறியீடு இல்லை எனக் கூறி எரிபொருள் பெற்றுக்கொள்ளும் நபர்களைக் கண்டறிய விசேட திட்டமும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.