உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு!


2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் (A/L) பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும், இதனால் மாணவர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாகவே தமது பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனுடன், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், சாதாரண தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், அவை நிறைவடைந்தவுடன் பெறுபேறுகளையும் விரைவாக வெளியிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.