சர்வதேச சந்தையில் திடீரென அதிகரித்த தங்கம் மற்றும் வெள்ளி; இலங்கையில் இன்றைய நிலவரம்!
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் திடீரென அதிகரித்துள்ளன. இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,513.15 அமெரிக்க டொலராகவும், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 70.48 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.
இந்த உயர்வின் தாக்கம் இலங்கையிலும் பிரதிபலித்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 390,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 358,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,850 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை உயர்வு, உள்ளூர் சந்தையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் மேலும் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சந்தை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
