அலகுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களின் கீழ் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம்!
இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண உயர்வை ஏப்ரல் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக இலங்கை மின்சார சபை 13.56% மின்சாரக் கட்டண உயர்வை கோரியிருந்தாலும், தற்போதுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 8% முதல் 12% வரையான கட்டண உயர்வை ஒவ்வொரு மின்சார உபயோக அலகின் அடிப்படையில் தந்துள்ளது.
அதன்படி 0 முதல் 30 அலகுகளுக்கு மின்சாரக் கட்டணம் 4.3% உயர்ந்து மாதம் 15 ரூபாய் அதிகரிக்கப்படுகிறது.
31 முதல் 60 அலகுகளுக்கு 6.9% உயர்வுடன் 45 ரூபாய் அதிகரிப்பு ஏற்படுகிறது.
61 முதல் 90 அலகுகளுக்கு 6.9% உயர்வுடன் 120 ரூபாய் மாதாந்திர அதிகரிப்பு ஏற்படுகிறது.
91 முதல் 180 அலகுகளுக்கு 7.2% உயர்வு வழங்கப்பட்டு 420 ரூபாய் அதிகரிக்கப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி
