இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) சிறிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 98 சதம் ஆகவும், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 51 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 421 ரூபாய் என்றும், விற்பனை பெறுமதி 434 ரூபாய் 02 சதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365 ரூபாய் 79 சதம், விற்பனை பெறுமதி 377 ரூபாய் 50 சதம் ஆக உள்ளது.

இத்தகவல்கள், இலங்கை மத்திய வங்கி இன்று (28) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.