தங்கத்தின் விலை மீண்டும் குறைவு ; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!


இலங்கையில் தங்கத்தின் விலை, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் வெளியிட்ட தகவலின்படி, நேற்று (13) 410,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 406,000 ரூபாவாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் 24 கரட் தங்கத்தின் விலையில் 4,000 ரூபா வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதேபோல், நேற்று 379,200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 375,500 ரூபாவாகக் குறைந்துள்ளது. இதனால் 22 கரட் தங்கத்தின் விலையில் 3,700 ரூபா குறைவு ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தால், இலங்கையில் தங்க விலையில் இவ்வாறான ஏற்றத் தாழ்வுகள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.