பாடசாலை விடுமுறை தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் நாளை மறுதினம் (11.04.2025) முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பித்து மே 9 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு (Ministry of Education ) இன்று (09.04.2025) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி