6ஆம் தரத்திற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு


2024
ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 6ஆம் தரத்திற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை இணையத்தினூடாக மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, விண்ணப்பங்களை இன்று (09) முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை http://g6application.moe.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் சமர்ப்பிக்க முடியும்.

அதிகபட்சம் மூன்று பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், மேலும் விபரங்களுக்கு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளமான www.moe.gov.lk என்பதனை பார்வையிடலாம் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.