பாடசாலை மாணவர்களுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விடுத்துள்ள அவசர அறிவிப்பு


பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலிப்பது குறித்து கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால், உடனடி விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் முதல் அமர்வில் பேசும் போது, பல்வேறு காரணங்களுக்காக பாடசாலைகளில் பணம் வசூலிப்பது தொடர்பாக அவசர விசாரணைகள் நடத்தப்படும் எனவும், இது குறித்த நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், கல்விக் கொள்கைகள் சரியாக செயல்படாததாலும், அரசியல் தலையீடுகளாலும் கல்வித் துறையில் பல்வேறு நெருக்கடிகள் உருவாகியுள்ளன என்று அவர் கவலை தெரிவித்தார்.

மேலும், 2026 ஆம் ஆண்டு செயல்படுத்த உள்ள கல்வி சீர்திருத்தங்களில்,

  • புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்துதல்
  • மனிதவள மேம்பாடு
  • கல்வி உள்கட்டமைப்பு வளர்ச்சி
  • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
  • மதிப்பீடு முறைகளை செயல்படுத்துதல்

ஆகியவை அடங்கும் என்று பிரதமர் விளக்கமளித்துள்ளார்.