இலங்கையர்களுக்கு இவ்வாண்டில் காத்திருக்கும் ஆச்சரியம்!
2025 ஆம் ஆண்டில் மூன்று சந்திர கிரகணங்களும் ஒரு சூரிய கிரகணமும் நடைபெறவுள்ளதாக ஆதர்சி கிளார்க் மையத்தின் தலைவர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியரான சந்தன ஜெயரத்ன தெரிவித்தார்.
மூன்று சந்திர கிரகணங்களில் இரண்டு சந்திர கிரகணங்கள் முழு சந்திர கிரகணங்களாகவே காணப்படும் என பேராசிரியர் மேலும் கூறினார்.
இந்த நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை (13) மற்றும் வெள்ளிக்கிழமை (14) ஆகிய இரு திகதிகளில் நடைபெறும் முழு சந்திர கிரகணங்கள் இலங்கையில் தென்படாது. அதேபோல், செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதியில் நடைபெறும் முழு சந்திர கிரகணம் இலங்கையில் தென்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
சூரிய கிரகணம் தொடர்பாக, இதுவரை எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை என பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.