பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமை – நாடளாவிய ரீதியில் இன்று வைத்தியர்கள் வேலைநிறுத்த போராட்டம்..!


அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த பெண் வைத்தியர் ஒருவர் மார்ச் 10ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (12) முதல் நாடளாவிய வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

இந்த அடையாள வேலைநிறுத்தம் இன்று காலை 8.00 மணி முதல் நாளை (13) காலை 8.00 மணி வரை அமலாகும்.

தொழிற்சங்கம் தெரிவித்ததாவது, வேலைநிறுத்தம் காரணமாக அவசர மருத்துவ சேவைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், குழந்தைகள் வைத்தியசாலைகள், மகப்பேறு மருத்துவமனைகள், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், தேசிய மனநல நிறுவனம் மற்றும் முப்படை வைத்தியசாலைகளில் இந்த வேலைநிறுத்தத்தை அமல்படுத்த வேண்டாம் எனவும் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.