மே மாதத்திற்கான எரிபொருள் விலை குறித்து வெளியான புதிய அறிவிப்பு!


மாதாந்திர விலை திருத்தத்தை முன்னிட்டு மே மாதத்திற்கான எரிபொருள் விலை குறித்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (மே 01) எரிபொருள் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த தகவலை அதன் ஊடகப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், எதிர்கால விலை மாற்றங்கள் சந்தை நிலைமைகளைப் பொருத்து உரிய நேரத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 21ஆம் திகதி செய்யப்பட்ட விலை உயர்விற்குப் பிறகு நிலவிய விலைகளே தொடர்ந்தும் அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீட்டர் 398 ரூபாய்க்கும், 95 ஒக்டேன் பெற்றோல் 455 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒட்டோ டீசல் லீட்டருக்கு 382 ரூபாயும், சூப்பர் டீசல் 443 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.