அஸ்வெசும திட்டம் தொடர்பில் வெளியான தகவல் - பயனாளிகளைத் தேர்வு செய்ய புதிய தொழில்நுட்பம்!


‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளைச் சரியாகத் தேர்வு செய்து, பட்டியலிடும் செயல்முறைகளை மேலும் செயல்திறன் வாய்ந்ததாக மாற்றுவதற்காக நேற்று நிதி அமைச்சில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த சந்திப்பில், தற்போது பயன்படுத்தப்படும் பயனாளி அடையாளப்படுத்தும் அளவுகோல்களை மேம்படுத்துவது, செயல்முறைகளை விரைவாக்குவது மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் நம்பகமான தரவுகளைப் பயன்படுத்தி துல்லியமான பயனாளி தெரிவை உறுதி செய்வது குறித்து விரிவான விவாதங்கள் இடம்பெற்றன.

மேலும், நீண்டகால சட்ட திருத்தங்களுடன் இணைந்து, உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய சுருக்கமான மற்றும் பயனுள்ள தீர்வுகளை அறிமுகப்படுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.

இதனுடன், காணப்படும் குறைபாடுகளை சரிசெய்தல், கிராம மட்ட அதிகாரிகளின் பங்களிப்பை அதிகரித்தல், நிதி வழங்கும் நடைமுறைகளை மேம்படுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சவால்களுக்கு தீர்வு காணுதல் போன்ற அம்சங்களும் விரிவாக ஆராயப்பட்டன.