இ.போ.சபை மற்றும் ரயில் சேவைகளில் பெண்களுக்கும் தொழில்


லங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத சேவையில் பெண்களை இணைப்பதற்கான முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (மார்ச் 7) நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:

“நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு, எங்கள் அமைச்சின் அமைச்சர்கள் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத சேவையில் பெண்களை நியமிக்க தீர்மானித்துள்ளனர். எதிர்காலத்தில், பெண்கள் பேருந்து சாரதிகளாக, விமானிகளாக, மேலும் ரயில்வே துறையிலும் பணியாற்றும் வாய்ப்புகளைக் கிடைக்கச் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றோம்.

மேலும், பாடசாலை பேருந்துகளை பெண்களுக்கு ஒப்படைப்பதற்கான திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.”