பெண்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை காரணமாக பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நடத்திய ஆய்வில், நாட்டின் 54% பெண்கள் போதைப்பொருள் பாவனையின் விளைவாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மகளிர் தினத்தினை முன்னிட்டு 25 மாவட்டங்களில், 15 வயதுக்கு மேற்பட்ட 1000 பெண்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்:
- 43% பெண்கள் உளவியல் ரீதியான சவால்களை எதிர்கொள்கிறார்கள்.
- 27.4% பெண்கள் அயலவர்களால், 27% பெண்கள் இனந்தெரியாதோர்களால், மற்றும் 20% பெண்கள் உறவினர்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
- மதுசார பாவனைக்கு பெண்களை ஈர்ப்பதற்காக மதுசார நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 29% பெண்கள் மதுசார விளம்பரங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றனர்.
- 34% பெண்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு குறைவாக உள்ளது.
பெண்கள் மட்டுமல்லாமல், அவர்களைச் சுற்றியுள்ள சமூகம் மதுபான மற்றும் போதைப்பொருள் பழக்கத்தால் பாதிக்கப்படுவதும் இவ்வாய்வில் வெளிச்சம் கண்டுள்ளது.
