நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை


இரத்தினபுரி, களுத்துறை, மற்றும் காலி மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு, மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை காணப்படலாம்.

காற்று வடகிழக்கு அல்லது மாறுபடும் திசையிலிருந்து மணிக்கு 20-30 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் லேசானது முதல் மிதமானது வரை காணப்படும்.