பாடசாலை செல்லும் சிறுமிகள் குறித்து வெளியான தகவல் - அதிர்ச்சியில் அதிகாரிகள்!
இலங்கையில் பாடசாலை செல்லும் சிறுமிகள் கர்ப்பமடைவது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சமூக வலைத்தள பயன்பாடு அதிகரித்ததுடன், சிறுவயதுக் கர்ப்பங்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு 163 மாணவிகள் கர்ப்பம் அடைந்திருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.
பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் மீதான அத்துமீறல் விசாரணை பிரிவின் தரவுகளின்படி:
- 2024ஆம் ஆண்டு பதிவான குழந்தைத் தாய்மார்களில் 10 வயது சிறுமி ஒருவர் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ள குழந்தைத் தாய்மார்களை விட, உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
- சில சம்பவங்களில், கர்ப்பத்திற்குப் பொறுப்பு கூற வேண்டிய ஆண்கள் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் எனவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் அத்துமீறல் அதிகரிப்பு:
- மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் புள்ளிவிபரங்கள் படி, அண்மைக் காலமாக சிறுவர் மீதான அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
- வாகரை, மண்முனை வடக்கு, மற்றும் கிரான் ஆகிய பிரதேசங்கள் சிறுவர் அத்துமீறல் அதிகம் இடம்பெற்ற பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த விடயங்கள் நாட்டில் மிகுந்த கவலையையும், சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் உருவாக்கியுள்ளது.
