தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்
பதவி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, இன்று (மார்ச் 06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தேடுதல் நடவடிக்கையில்
🔹 தேசபந்து தென்னகோனை கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
🔹 அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
🔹 உரிய தகவல்களை உடனடியாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
